Dec
1
2011

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-1

இன்றைக்கு இருக்கின்ற 247 தமிழ் எழுத்துக்களில் 239 எழுத்துக்களை மாற்றுவதற்கு நடக்கும்பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்). தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றி உருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதி தமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகைதமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள். தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்உண்டு. தீப்பெட்டிக்கு பெயர் ஒட்டும் தொழில், தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில்,பீடி சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டுபொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு. தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்றுஉயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள் மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கை குறைப்புத் தொழில் போன்று பல்வேறு கோணங்களில்தமிழ் கூறும் மக்களிடையே புற்றீசல் போலத் தோன்றியிருக்கிறது. [...]

Jan
9
2011

யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் – வினா-விடை – பகுதி-1

தமிழ் உலகில் குறிப்பாகக் கடந்த 3 மாதங்களாக  நிலவுகின்ற, “தமிழ்-ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு” பற்றிய விதயங்களை, பல் துறை சார்ந்தோர்க்கும் அறியத்தரும் வண்ணம் இந்த ஆவணத்தை அமைக்க முயன்றிருக்கிறேன். இது அடிக்கடி ஊடாடும் வினாக்கள் (FAQ) முறையையும் கட்டுரை விளக்க முறையையும் உள்ளடக்கியதாக அமைகிறது. ஒருங்குறி அடிப்படைகள், அதன் கட்டமைப்பு, கிரந்த நுழைப்பு முன்மொழிவுகள், கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்தவை பற்றிய குறிப்புகள், தற்போது நிலவுகின்ற குழப்பங்கள் ஆகியவற்றை விளக்குவதாகவும், தமிழ்ப் பற்றாளரும் தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றிய பார்வை காட்டுவதாகவும் இது அமைகிறது. *தொகுதி-1: ஒருங்குறி – அறிமுகம்* *1) யுனிக்கோடு என்றால் என்ன?* கணியிற் பல்வேறு மொழி எழுத்துக்களை இப்பொழுது [...]

Jul
9
2010

தமிழெழுத்துப் பரம்பல் – 1

“எழுத்துச் சீர்குலைப்பாளர்கள் தமிழக அரசியலாரிடம் தங்களுக்கு இருக்கும் அணுக்கத்தைப் பயன்படுத்தி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முடிவில் எழுத்துச் சீர்குலைப்பிற்கு ஆதரவாக ஓர் அரசாணை கொண்டுவர முயல்கிறார்கள்” என்று 10, 11 மாதங்களுக்கு முன் அரசல் புரசலாகச் செய்தி வெளிப்பட்டது. இது தெரிந்தவுடனேயே ”இதை நடக்க விட்டுவிடக் கூடாது, பலரையும் ஒருங்கு சேர்த்து நம்மால் முடிந்தவரை, பரவலாய் எதிர் வாதங்களைத் தொடுக்க வேண்டும், அதே பொழுது எழுத்துக்காப்பு வாதங்கள் ‘அவர் சொன்னார், இவர் சொன்னார்’ என்று வெறும் மேற்கோள் காட்டுவதாய் மட்டுமே அமையக்கூடாது. மாறாக, யாராலும் அளக்கக் கூடிய எண்ணக (measurable and quantitative) முறையில், அடிப்படை ஏரணங்களோடு (with basic logic), அமையவேண்டும்” என்று [...]

Jul
3
2010

தமிழெழுத்து மாற்றம் பெரியார் கொள்கையல்ல!

ஞா.தேவநேயன் அரச கோபாலாச்சாரியார் 1937 இல் தமிழ்நாட்டி கட்டாய இந்திக் கல்வியை புகுத்தியதிலிருந்து, நான் இந்தியெதிர்ப்புப் பற்றிப் பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப் பழகினேன். அக்காலமெல்லாம், தமிழர்   “விடுதலை” யெழுத்தை மேற்கொள்ள வேண்டுமென்று, பெரியார் ஒரு கூட்டதிலேனுஞ் சொன்னதுமில்லை; ஒர் இதழிலேனும் எழுதினதுமில்லை. எனக்கு முன்பே பெரியாரை யடுத்து அவர் தன்மானக் கொள்கையைக் கடைபிடித்து அவருக்கு வலக்கை போல துணையாயிருந்து வந்த பர். கி.ஆ.பெ.விசுவநாதம் எனும் உலக நம்பியாரும், இதற்கு சான்றுபகர்வர். தமிழெழுத்து மாற்றம் என்பது தேவையில்லாத ஒரு சிறு செயல். பெரியார் செயற்கரிய பெருஞ்செயல்களைச் செய்தவர். அவர் மீது ஒரு புன் செயலையேற்றுவது, அவர் பெயருக்கு இழுக்கேயாகும். பெரியார் இயலும் செயலும் பல்வகைப்பட்டிருக்கவும், [...]

Jul
1
2010

இந்த தளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது

வணக்கம் இந்த தளத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.